மாணவர் ஒருவரை மானப்பங்கம் செய்ததாக ரொஹின்யா இனத்தைச் சேர்ந்த சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இன்று கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
58 வயதுடைய அபு தோயுப் உமோர் அப்பாஸ் என்ற அந்தச் சமய ஆசிரியர் கடந்த ஏப்ரல் முதல் தேதி, கிளந்தான், கடொக், கம்போங் பதேக் தாலாங்கில் உள்ள சமயப் பள்ளியில், 11 வயதுடைய ரொஹின்யா மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தச் சமய ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


