Sep 23, 2026
Thisaigal NewsYouTube
இதய அறுவை சிகிச்சைக்குத் தயாராகிறார் துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப்
தற்போதைய செய்திகள்

இதய அறுவை சிகிச்சைக்குத் தயாராகிறார் துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோஃப்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.03-

துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரைவில் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-இல், இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், தற்போது ஃபாடில்லா யூசோஃப் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் Misiah Taib வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சையும் அதனைத் தொடர்ந்து குணமடையும் காலக்கட்டமும் தடையின்றி நடைபெறுவதற்காக, அவர் முழுமையான ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் வழக்கம் போல் தனது அரசாங்கப் பொறுப்புகளைத் தொடர பொதுமக்கள் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்

ஆர்டிஎம் வானொலி தொகுப்பாளர் திடீர் மரணம்

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்