Oct 18, 2026
Thisaigal NewsYouTube

டிரெய்லர் லோரியின் வால்பகுதி கழன்று குடை சாய்ந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிரெய்லர் லோரியின் வால்பகுதி கழன்று குடை சாய்ந்தது

ஜொகூர் , செப்டம்பர் 03-

காண்கிரேட் தூண்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரி ஒன்றின் வால் பகுதி கழன்று குடை சாய்ந்ததில் அந்த கட்டுமானத் தூண்கள் நாலா புறமும் சிதறின.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 10.7 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர்பாருவிற்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் 26 வயது லோரி ஓட்டுநர், காயமின்றி உயிர் தப்பிய வேளையில் பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

சாலையில் சிதறிய காண்கிரேட் தூண்களை அகற்றும் பணியின் போது நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →