Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? எஸ்.டி.ஆர் (STR) நிதியுதவி கிடைக்காமல் போக வாய்ப்பு: துணை நிதியமைச்சர் எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? எஸ்.டி.ஆர் (STR) நிதியுதவி கிடைக்காமல் போக வாய்ப்பு: துணை நிதியமைச்சர் எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

மலேசிய குடிமக்கள் மாதத்திற்கு எட்டு முறைக்கும் மேலாக சிங்கப்பூருக்குச் சென்று வந்தால், அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்களாகக் கருதப்பட்டு, அவர்களின் 'ரஹ்மா உதவி நிதி' தகுதி பாதிக்கப்படலாம் என்று துணை நிதியமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் விதிமுறைப்படி, மாதத்திற்கு 7 முறை வரை சிங்கப்பூர் செல்வது மருத்துவ சிகிச்சை அல்லது குடும்ப விவகாரங்கள் போன்ற தற்காலிகச் சூழலாகக் கருதப்படும்; ஆனால் அதற்கு மேல் செல்பவர்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களாக அல்லது பணிபுரிபவர்களாகக் கணக்கிடப்படுவார்கள்.

அரசாங்கத்தின் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியுதவி உண்மையான தகுதியுடைய மலேசியர்களுக்கு மட்டுமே சேருவதை உறுதிச் செய்ய, குடிநுழைவுத் துறை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளின் தரவுகள் மூலம் விண்ணப்பதாரர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி அடிக்கடி எல்லை தாண்டிச் செல்பவர்கள் போன்ற நியாயமான காரணங்கள் உள்ளவர்கள், ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் மேல்முறையீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News