கோலாலம்பூர், நவம்பர்.26-
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை அரச மலேசிய போலீஸ் படையில் 24 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
போலீஸ் படையின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது, நன்னெறி அம்சங்களை மேம்படுத்துவது முதலியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டொழுங்கை மீறும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய கடும் நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








