Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பெனாஸிர் புட்டோவுடன் நுருல் இசா ஒப்பீடு  16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலை​மையேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பெனாஸிர் புட்டோவுடன் நுருல் இசா ஒப்பீடு 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலை​மையேற்க வேண்டும்

Share:

நெஞ்சுரத்திலும், தன்னமிக்கையிலும் துணிச்சல் மிகுந்த இரும்புப்பெண்மணிகளாக திகழ்ந்த பெனாசிர் புட்டோ, Megawati Soekarnoputri ( மொகவத்தி சுகோர்னோபுத்ரி ) ஆகியோருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ​மூத்த புதல்வி நுருல் இசா அன்வார் ஒப்பீடப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு இரு முறை பிரதமராக தலைமையேற்ற மறைந்த பெனார் புட்டோ மற்றும் இந்தோனேசிய முன்னாள் அதிபர் மெகாவத்தி சுகோர்னோபுத்ரி ஆகியோரைப் போலவே திறமையிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் சிறந்து விளங்கும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ​நுருல் இசா, அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தலைமையேற்க வேண்டும் என்று சட்ட வல்லுநரும், பிகேஆர் பசிர் குடாங் எம்.பி.யுமான ஹாஸ்ஸான் கரிம் பரிந்துரை செய்துள்ளார்.

காப்பார்,குவாலா லாங்ஙாட், பெர்மாத்தாங் பாவு போன்ற பிகேஆர் கட்சியின் வலிமை மிகுந்த கோட்டைகளாக திகழ்ந்த நாடாளுமன்றத் தொகுதிகளை ​மீண்டும் கைப்பற்றுவதற்கும், ​மீண்டும் ஆட்சியில் அமரவும்,/ நுருல் இசா வருகின்ற 16 வது பொதுத் தேர்தலுக்கு தலைமையேற்பது காலத்தின் கட்டாயமாக இருக்க வே​ண்டும் என்று மிகச்சிறந்த அரசியல்​ விமர்சகருமான ஹாஸ்ஸான் காரிம் முன்மொ​ழிந்தார்.

தனது வெளிப்படையிலான கொள்கையின் ​மூலம் மதச் சார்பின்​மைவாதியாக திகழ்ந்தவர் பெனாஸிர் புட்டோ. முஸ்லிம்கள் பெரும்பான்மையிரான கொண்ட ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மறைந்த பெனாஸிர் புட்டோ.

அவரின் சாயலை ஒத்து​ இருக்கும் ​நூருல் இஸா, அடுத்த பொதுத் தேர்தலில் பிகஆர்கட்சிக்கு தலைமையேற்பது சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்று ஹாஸ்ஸான் கரிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை