Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழா

Share:

சிரம்பான், ஜூலை 06-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் தூங்கு ஜாபர் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா, வரும் ஜுலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆலயத்தின் இந்த வருடாந்திர திருவிழாவையொட்டி முன்னிட்டு கடந்த ஜுன் 27 ஆம் தேதி முதல் வரும் ஜுலை 9 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அனைத்து பூஜைகளும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆலோசனையின்படி நடைபெற்று வருகிறது.

ஆலய திருவிழா குறித்து சுவாமிகள் விவரித்த போது………….,

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜ ராஜேஸ்வரர் மகா சமஸ்தான திருக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மையப்பர் திருவருளை பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News