Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் விமான நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மலேசியாவின் ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X) நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 16 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படாததால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 27 சென் அதாவது 16.1 விழுக்காட்டிலிருந்து சரிந்து 1.41 ரிங்கிட் என்ற நிலையை எட்டின. கடந்த வார இறுதியில் மோதல் வெடித்ததில் இருந்து, வெறும் நான்கு வர்த்தக நாட்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 29 விழுக்காடு சரிந்துள்ளன.

2026 மலேசிய சுற்றுலா ஆண்டு மற்றும் ரிங்கிட் மதிப்பின் உயர்வு காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈட்டிய லாபங்கள் அனைத்தையும் இந்தச் சரிவு, விழுங்கிவிட்டது. விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற காரணங்களால் ஆசிய விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு