Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளி மாணவியை பகடிவதை செய்வதா?
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவியை பகடிவதை செய்வதா?

Share:

சிறப்புப்பள்ளி ஒன்றில் மாற்றுத் திறனாளி மாணவி, மனோரீதியாக பாதிக்கப்படும் அளவிற்கு அந்த மாணவியை பகடிவதை செய்து வந்ததாக ஆசிரியருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சு விசாரணை செய்து வருவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் இந்த பகடிவதையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரை கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

சிறப்புப்பள்ளி ஒன்றில் பயின்று வந்த 14 வயது மாணவியை , ஆசிரியை ஒருவர் தொடர்ச்சியாக பகடிவதை செய்து வந்ததானால் அந்த மாணவி மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டு இருப்பது தொடர்பில் அமைச்சர் ஃபத்லினா சிடெக் இதனை தெரிவித்தார்.

Related News