Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவருக்கு : 4 நாட்கள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவருக்கு : 4 நாட்கள் தடுப்புக்காவல்

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாக கூறப்படும் உணவு விநியோகிப்பாளர் ஒருவர், நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 22 வயது சந்தேக நபரை, வரும் மார்ச் 23 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உஸ்மான் அப்துல் கனி உத்தரவிட்டார்.

குற்றவியல் சட்டம் 323- ஆவது பிரிவின் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

மலாக்கா, ஜாசினில் உள்ள தாமான் ஸ்ரீ கெமெண்டோர் பகுதியில் உள்ள வீட்டில், தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் அந்த நபரை, மலாக்கா போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையினர் நேற்று காலை 11 மணியளவில் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கிறிஸ்டோபர் பாட்டி உறுதிப்படுத்தினார்.

Related News