கோலாலம்பூரில் உள்ள பேரங்காடி வணிக வளாகம் ஒன்றில், 20 வயதைக் கடந்த உள்ளூர் பெண் ஒருவர் வெளிநாட்டவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், போலீஸ் துறை சந்தேக நபரைத் தேடி வருகிறது.
கடந்த சனிக்கிழமை, அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்தப் பெண் தனது காதலருடன் நெருக்கமாக இருந்ததைச் சந்தேக நபர் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், தமது கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் காணொளியைப் பரப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பெண்ணின் காதலரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறிய சந்தேக நபர், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என நம்பப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீஸ் துறையின் கருத்தைப் பெறும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.








