சபா, இனானாம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த மோதலில், 23 வயது இளைஞரைத் தலைக்கவசத்தால் தலையில் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் நேற்று மாலை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 12.45 மணியளவில் துவாரான் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் ஷாருடின் மாட் ஹுசேன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், மோட்டார் சைக்கிளோட்டி என நம்பப்படும் அந்த இளைஞரை ஒரு கும்பல் தாக்கிக் காலால் உதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கியதுடன், மற்றொருவர் இளைஞரின் தலையில் உதைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.








