கோலாலம்பூர் மாநகரில் போலீஸ் துறை சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளை எளிதாக அணுகுவதற்கு, இரண்டாவது கூட்டு கட்டுப்பாட்டு மையத்தை அமைப்பது குறித்து கோலாலம்பூர் மாநகர மன்றமான டிபிகேஎல்லும் போலீஸ் துறையும் ஆலோசித்து வருகின்றன.
கோலாலம்பூரில் சுமார் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்புக் கண்காணிப்புக்கு உதவி வருவதாக, கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு முதல், சிசிடிவி செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகக் கூட்டு கட்டுப்பாட்டு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
புதிய மையம் அமைக்கப்பட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து நிர்வாகம், சாலை மூடல் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது டிபிகேஎல், போலீஸ் துறை இடையிலான ஒருங்கிணைப்பு மேம்படும் என்றும் அவர் கூறினார்.








