Oct 12, 2026
Thisaigal NewsYouTube

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் ஒருமுறை உதவித்தொகை, வரும் புதன்கிழமை அக்டோபர் 14ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 38 ஆயிரம் டாக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களும், 15 ஆயிரம் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களும் பயனடைவர். எச் வரிசை வாகனப் பதிவெண்கள் மூலம் கிடைத்த 91 மில்லியன் ரிங்கிட் வருவாயை ஓட்டுநர்களுக்குத் திருப்பி வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு முன்பாக இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு இந்து ஓட்டுநர்களுக்கு உதவ அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், கேடிஎம் பயணிகளுக்கான மாதம் 50 ரிங்கிட் கட்டணத்தில் 30 நாட்களுக்கு வரம்பற்ற பயணத்தை வழங்கும் மைகொமுட்டர்50 பயண அட்டை, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்தோணி லோக் அறிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

கோலாலம்பூரில் 6 வாகனங்கள் மோதிய விபத்து: பிஒய்டி கார் ஓட்டுநர் கண்டறியப்பட்டார்

கோலாலம்பூரில் 6 வாகனங்கள் மோதிய விபத்து: பிஒய்டி கார் ஓட்டுநர் கண்டறியப்பட்டார்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உ... | Thisaigal News