May 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இலங்காவியில் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு !

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்காவி வாழ் மக்கள் தண்ணீர் பிரச்சனையை எதிர்நோக்கி வந்த வேளையில், ஸ்பாம் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணைய ஒத்துழைப்புடன் சில தீர்வுகளைக் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆணையத்தின் தலைவர் சார்லெஸ் சந்தியாகோவும் பாதிக்கட்ட தாமான் சுங்ஙை ராயா, கம்போங் பெலாங்கா பெச்சா, கம்போங் தெலுக், கம்போங் கிஸாப் ஆகியவற்றில் வசிக்கும் ப்பக்கள் நிகராளிகளும் நேற்று முன்தினம் ஒரு சந்திப்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரு தரப்பும் ஒரு மனதாக சில முடிவுகளுக்கு உடன்பட்டனர்.

குறுகிய கால தீர்வாக, ஷரிக்காட் ஆயிர் டாருல் ஆமான் எஸ்டிஎன் பிஎச்டி வாயிலாக அதிகமான தண்ணீரை விநியோகிக்க கூடுதல் தண்ணீர் லாரிகள் அனுப்பப்படும். உதவிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படும்.

நீண்ட காலத் தீர்வாக, பாடாங் சாகா 4இலும் 5இலும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்படும். அதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும். இந்தத் திட்டம் எதிர்வரும் 2028 இல் முழுமை பெறும் என ஸ்பான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

இலங்காவியில் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு ! | Thisaigal News