Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டிபிகேஎல் மூத்த இயக்குநர் மீது தொடர்ந்து விசாரணை
தற்போதைய செய்திகள்

டிபிகேஎல் மூத்த இயக்குநர் மீது தொடர்ந்து விசாரணை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-

கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் உயர் அரசாங்க அதிகாரியான மூத்த இயக்குநர் ஒருவர் எந்தவொரு பணமும் செலுத்தாமல் அவருக்கு ஆடம்பர கொண்டோமினியம் வீடு கைமாறியது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

டத்தோ பண்டார் அலுவலகத்தில் ஜூசா பி கிரேட் அந்தஸ்தைக் கொண்டுள்ள 50 வயதுடைய அந்த உயர் அதிகாரி உட்பட மூன்று நபர்களை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி கடந்த 11 ஆண்டு காலமாக லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருகிறார் என்று பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட இதர இரண்டு நபர்களில் ஒருவர், நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆவார். இந்த மூவரும் டிபிகேஎல் குத்தகைகளை யாருக்குக் கொடுப்பது என்பதில் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News