Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சளி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்

Share:

தற்போது கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சொற்ப அறிகுறிகளே தென்படுவதாக மலேசிய மருத்துவச் சங்கமான எம் எம் ஏ தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் குறிப்பிடுகயில், சளி போன்ற சொற்ப அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

அதிக ஆபத்துகளை சந்திக்கக் கூடிய தரப்பினர் வெளியில் செல்லும்போது முகக்கவரி அணிவதை எம் எம் ஏ வளியுறுத்துகிறது கூடுதல் தடுப்பூசியையும் அவர்கள் செலுத்திக் கொள்வது நல்லது எனவும் குறிப்பிட்டது.

Related News