கோலாலம்பூர், ஜனவரி.17-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று சனிக்கிழமை இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தினார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவின்படி, இந்தச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விளக்கங்களை மாமன்னர், பிரதமரிடமிருந்து கேட்டறிந்தார்.
அரசாங்க நிர்வாகம் மற்றும் மக்களின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும் பிரதமரிடம் மாமன்னர் ஆலோசனை மேற்கொண்டதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








