Oct 5, 2026
Thisaigal NewsYouTube

ரிங்கிட் 314 மில்லியன் நிலுவை: பதவி விலகக் கோருவோருக்கு அந்தோணி லோக் பதிலடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்கிட் 314 மில்லியன் நிலுவை: பதவி விலகக் கோருவோருக்கு அந்தோணி லோக் பதிலடி

சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவுக்கு செலுத்த வேண்டிய ரிங்கிட் 314 மில்லியன் தொகையை மைஇஜி (MYEG) மற்றும் ஸெட்ரிக்ஸ் ஏஐ (Zetrix AI) செலுத்தத் தவறிய விவகாரத்தில், தாம் பதவி விலக வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுப்பவர்கள் ‘இணையப் பிரச்சாரக் குழுவினர்’ என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சாடினார்.

ரிங்கிட் 314 மில்லியன் தொகை மூன்று ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்ததாக வெளியான தகவலை அவர் மறுத்தார். இந்த நிலுவைத் தொகை இந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் 30 வரை செலுத்தப்படாத தொகை என்றும், இதற்கு முன்னர் இருந்த நிலுவைகள் நினைவூட்டல் விடுக்கப்பட்ட பின்னர் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சு 30-க்கும் மேற்பட்ட முறை அறிவுறுத்தியும் தொகை செலுத்தப்படாததால், ஜேபிஜே, மைஇஜி மற்றும் ஸெட்ரிக்ஸ் ஏஐ நிறுவனங்களின் சேவைகளை இன்று முதல் இடைநிறுத்தியுள்ளது. நிலுவைத் தொகையை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தோணி லோக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →