Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவுடன் கூட்டணி கொள்ளவது மூலம் இழப்பு பக்காத்தான் ஹராப்பானுக்கே
தற்போதைய செய்திகள்

அம்னோவுடன் கூட்டணி கொள்ளவது மூலம் இழப்பு பக்காத்தான் ஹராப்பானுக்கே

Share:

விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 6 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில், அம்னோவுடன் கூட்டணி கொள்வது மூலம் பக்காத்தான் ஹராப்பானுக்கும், ஜசெகவிற்கும் இழப்பு காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜசெகவுடன் கூட்டுச் சேர்ந்து அம்னோ இந்தச் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மூலம், மலாய்க்காரர் வாக்காளர்களைக் கவருவது சிரமமான ஒன்றாகும் என்று அம்னோ தலைவர்களே கூறியுள்ளனர்.

இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான், அம்னோவுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மூலம் அந்தக் கூட்டணி மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில் தோல்வி காணலாம்.

இது கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட நெருக்கடியைப் போல், சட்டமன்ற தேர்தலிலும், மிகப் பெரிய இழப்பை பக்காத்தான் ஹராப்பான் சந்திக்கக்கூடும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அமாட் ஃபௌஸி அப்துல் ஹமிட் எச்சரித்துள்ளார்.

Related News