Dec 5, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவ வீரரின் சடலத்தைக் கண்டெடுத்த 2 இளைஞர்கள்
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவ வீரரின் சடலத்தைக் கண்டெடுத்த 2 இளைஞர்கள்

Share:

மலாக்கா, தாமான் இன்டா, சுங்ஙை உடாங் பகுதியில் உள்ள ஏரியில் 42 வயதான முன்னாள் கமாண்டோ வீரரின் சடலத்தை அங்கு மீன் பிடிக்கச் சென்ற இரு 14 வயது இளைஞர்கள் கண்டெடுத்தனர்.

இது குறித்து தகவல் அளித்த அலோர் காஜா காவல் துறை தலைவர் அர்ஷாட் அபு கூறிகயில், அந்த இளைஞர்களின் தந்தையார் சடலம் குறித்து காவல் துறையில் புகார் அளித்ததாகக் கூறினார்.

இறந்து போனவர் கெம் சுங்ஙை உடாங் இல் கமாண்டோ அதிகாரியாக இருந்ததாகவும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அர்ஷாட் அபு கூறினார்.

ஒரு மாதம் முன்னர்தான் அவருக்கு விவாகரத்து ஆனதாகவும் இரு நாட்களுக்கு முன்னர் காலை 9.00 மணி அளவில் அவரது முன்னாள் மனைவி ஆகக் கடைசியாகத் தொடர் கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக அர்ஷாட் அபு குறிப்பிட்டார்.

உடற்கூறாய்வுக்காக அந்தச் சடலம் ஆலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News