Sep 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரி மீது வன்முறைப் புகார்: குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருமுனை விசாரணை தீவிரம்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரி மீது வன்முறைப் புகார்: குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருமுனை விசாரணை தீவிரம்

Share:

சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யும் போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவரின் தலையை மிதித்து, வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கெடா, கூலிம் பகுதியில் நடந்த புகார் குறித்து, குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இருவேறு விசாரணைகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் துணை தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரையும் பாதுகாக்கும் எண்ணம் போலீஸுக்கு இல்லை என்றும், விசாரணை முடிந்தவுடன் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ஒரு சிறு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பொதுமக்கள் எந்த முடிவிற்கும் வர வேண்டாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News