விரைவில் அமைச்சரவை சீரமைப்பு நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் அது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்து விட்டார். ஜனவரியில் அமைச்சரவை மாற்றம் நடைபெறுமா? என்று கேட்ட போது, ஏன் ஜனவரி…..டிசம்பர் என்று பிரதமர் பதில் அளித்தார்.
தமது தலைமையிலான மடானி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியிருப்பதை யொட்டி நடைபெற்ற விருந்து நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கு அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.








