ஈப்போ, ஜூலை.05-
பேராக் மாநிலம், தாமான் தெமாரா பகுதியில், வீட்டின் கதவைத் திறப்பதற்காக காரில் இருந்து இறங்கிய 38 வயது பெண் ஒருவர், திடீரென முன்னோக்கி நகர்ந்த தனது காரின் அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3.39 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது, கார் எஞ்சினை அணைக்காமல் விட்ட நிலையில், வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்ததால், அந்தப் பெண் கீழே விழுந்து காரின் அடியில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அங்கு வந்த பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் அப்பெண்ணை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.








