கோல கிராயில் காணாமல் போன மாட்டைத் தேடி தோட்டப் பகுதிக்குச் சென்ற 66 வயது முதியவர், யானை தாக்கியதில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
கம்போங் பாஹியைச் சேர்ந்த ஃகாஸாலி செதாப்பா என்பவர், தனது இரு மகன்கள் மற்றும் 3 நண்பர்களுடன் லெபான் காபு தோட்டத்துக்குச் சென்று மாட்டைத் தேடியுள்ளார்.
பின்னர் குழுவினர் தனித்தனியாகப் பிரிந்து தேடிய நிலையில், ஒருவருக்கு யானை தென்பட்டுள்ளது.
இதையடுத்து வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான ஏற்ஈளீஆண் (Perhilitan) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க ஒருவர் அனுப்பப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அருகில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுள்ளது.
அந்தச் சத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற போது, ஃகாஸாலி யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததும் போலீஸ், பெர்ஹிலிதான் அதிகாரிகள் இணைந்து சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் தெரிவித்துள்ளார்.








