Sep 9, 2026
Thisaigal NewsYouTube
தபுங் ஹாஜி முறைகேடு: முன்னாள் உயர் அதிகாரி உட்பட மேலும் 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

தபுங் ஹாஜி முறைகேடு: முன்னாள் உயர் அதிகாரி உட்பட மேலும் 5 பேர் கைது

Share:

தபுங் ஹாஜி முறைகேடு தொடர்பான விசாரணையில், புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களில் 3 பேர் 2017-ஆம் ஆண்டு லாபப் பங்கீட்டுத் தொகை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், மற்ற இருவர் 2001 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் ருஸ்டி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.

மேலும் கைதானவர்களில் முன்னாள் தபுங் ஹாஜி தலைவர், முன்னாள் தலைமைச் செயலதிகாரி, முன்னாள் தலைமை கணக்கியல் அதிகாரி மற்றும் தற்போதைய ஊழியர்களும் அடங்குவர்.

இந்நிலையில், மூன்று சந்தேக நபர்கள் வரும் வியாழக்கிழமை வரையும், மற்ற இருவர் வெள்ளிக்கிழமை வரையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News