Sep 9, 2026
Thisaigal NewsYouTube
நிபோங் திபாலில் கழிவுநீர்த் தொட்டியில் ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

நிபோங் திபாலில் கழிவுநீர்த் தொட்டியில் ஆடவர் சடலம் மீட்பு

Share:

நிபோங் திபால் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அவ்வீட்டின் கழிவுநீர்த் தொட்டியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், லோரோங் 7 பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டு பின்புற கழிவுநீர்த் தொட்டிக்குள் சடலம் கிடத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துர்நாற்றம் குறித்து அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தைச் சோதனையிட்டனர்.

சடலம் சுமார் இரண்டு நாட்களாக தொட்டிக்குள் இருந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் போலீசார் அச்சடலத்தை மீட்டனர்.

Related News