Jun 30, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மிக மெதுவாகச் செல்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, ஜோகூர் காஸ்வே, கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை மற்றும் வடக்கு நோக்கிச் செல்லும் டாமன்சாரா-பூச்சோங் LDP நெடுஞ்சாலை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், கோபெங்கில் இருந்து சிம்பாங் பூலாய் வரை நெரிசல் காணப்படுகிறது. தெற்கு நோக்கிய பாதையில், பெர்மாத்தாங் பாவ் முதல் பிறை வரையிலும், ஜுரு சந்திப்பில் இருந்து ஜுரு டோல் பிளாசா வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், மேரு சுரங்கப் பாதை முதல் ஈப்போ வரையிலும், கோபெங் முதல் தாப்பா வரையிலும் போக்குவரத்து மந்தமாக உள்ளது. அதே போல், செனாய் முதல் கூலாய் ஓய்விடப் பகுதி வரையிலும், நீலாய் முதல் Bandar Ainsdale வரையிலும் வாகனங்கள் மிக மெதுவாக நகர்ந்து வருவதால், பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News