Jul 23, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டிய சிறுவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கூலிமில் மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டிய சிறுவர்கள் கைது

Share:

கூலிம் மாவட்டத்தில் சாலையில் மோட்டார் சைக்கிளைத் தூக்கி ஆபத்தான முறையில் ஓட்டிய காணொளி வைரலானதைத் தொடர்ந்து, 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களைப் போலீஸ் கைது செய்துள்ளனர்.

சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீட்டிலேயே கைது செய்யப்பட்ட அவ்விரு சிறுவர்களிடமிருந்து, அவர்கள் பயன்படுத்திய ஹோண்டா சி100 வகை மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 42(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளின் நடமாட்டத்தைக் பெற்றோர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என கூலிம் மாவட்டத் போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன் சம்சுல் பின் சின்ரிங் அறிவுறுத்தினார்.

Related News