பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே 2027ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது மடானி பட்ஜெட்டின் முக்கிய இலக்கு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி மட்டும் போதுமானதல்ல என்றும், மக்கள் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டால் அந்த வளர்ச்சிக்கு முழுமையான அர்த்தம் இருக்காது என்றும் அன்வார் கூறியுள்ளார்.
எனவே, 2027 பட்ஜெட் மக்களின் சுமையைக் குறைத்தல், அவர்களைப் பாதுகாத்தல், புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பலன்கள் மக்களுக்கு நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
2027 பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தாக்கல் செய்ய இருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்துள்ளார்.








