Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஈப்போவிற்கும் சிங்கப்பூருக்கும் நேரடி விமானச் சேவை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈப்போவிற்கும் சிங்கப்பூருக்கும் நேரடி விமானச் சேவை

ஈப்போ, டிசம்பர்.08-

ஈப்போவிற்கு சிங்கப்பூருக்கும் இடையில் நேரடி விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவை இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

பாதேக் ஏர் விமான நிறுவனம் இந்தச் சேவையைத் தொடக்கியிருப்பதாக பேரா மாநில சுற்றுலா, தொழில்துறை, முதலீடு மற்றும் பெருவழி மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் லோ ஸீ யீ தெரிவித்தார்.

இது, ஈப்போவிலிருந்து பாதேக் ஏர் மேற்கொள்ளும் இரண்டாவது விமானச் சேவையாகும்.

73 பேரை உள்ளடக்கிய பயணிகளை ஈப்போ, சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு வழியனுப்பி வைக்கும் வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சேவையின் மூலம் அதிகமான விமானச் சேவைகளை பதேக் ஏர், ஈப்போவிலிருந்து தொடங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →