Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் இரண்டு விற்பனை பணியாளர்கள் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் இரண்டு விற்பனை பணியாளர்கள் மரணம்

மாராங், நவ. 18-


சாலையில் தேங்கியிருந்த நீரில் மோதி, கார் ஒன்று தடம் புரண்டு, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு விற்பனை பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் திரெங்கானு, மாராங், பாசீர் புத்தே மெர்சாங்கில் நிகழ்ந்தது- 20 வயது முகமட் அமிர் இக்மால் ஹஷிம் மற்றும் 24 வயது அகமட் பாரிட் இஸ்வான் முகமட் என்ற இரு இளைஞர்கள் இவ்விபத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

அவ்விரு விற்பனை பணியாளர்களும், கெமாமானிலிருந்து கோலத்திரெங்கானுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோபினான் ரிட்சுவான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →