புலனம் வாயுலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக நம்பப்படும் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று இரவு மலாக்காவில் அந்த43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக செபாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்,
குற்றவியல் சட்டம் 504இன் படியும் தொலைத்தொடர்பு, பல்லூடக சட்டம் 1998இன் படியும் அந்த ஆடவர் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.








