கோலாலம்பூர், நவம்பர்.18-
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதற்கு ஏற்ப அனைத்து வகையான சிகரெட்டுகளும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் விலை உயர்த்தப்படவிருப்பதாக British American Tobacco Malaysia Berhad அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட சிகரெட் புதிய விலைகளை சுகாதார அமைச்சு அங்கீகரித்துள்ளதாக அந்த சிகரெட் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய விலை உயர்வின்படி தற்போது 17 ரிங்கிட் 70 காசுக்கு விற்கப்படும் டன்ஹில் சிகரெட் 18 ரிங்கிட் 20 காசுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.








