Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது
தற்போதைய செய்திகள்

கடத்தல், பொய்யான பிரகடனம்: நிறுவன இயக்குநர், நிர்வாகி கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

கடத்தல் மற்றும் பொய்யான பிரகடனம் தொடர்பில் இரு நிறுவனங்களின் இயக்குநரையும், நிர்வாகியையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

பிரகடனப் பத்திரத்தில் பொய்யான தகவலை வழங்கி, சிகரெட், மதுபானம் கடத்தல் தொடர்பில் 30, 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று தொடங்கப்பட்ட ஓப் லுங் என்ற சோதனை நடவடிக்கையின் வாயிலாக புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அந்த நபர்கள் தடுக்கப்பட்டனர்.

சட்டவிரோதக் கிடங்கு என்ற அடையாளம் காணப்பட்ட 5 வர்த்தகத் தளங்களிலும் 15 நிறுவனங்களிலும் இதே போன்ற சோதனையை எஸ்பிஆர்எம் மேற்கொண்டுள்ளது.

Related News