Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி வெற்றி
தற்போதைய செய்திகள்

காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி வெற்றி

Share:

ஜோர்ஜ் டவுன், ஜன - 4,

பினாங்கு, கோப்பா அரேனாவில் தேசிய அளவிலான MIFA காற்பந்து போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 24 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடந்தேறியது.

12 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் டெங்கில் தமிழ்ப்பள்ளி பங்கேற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டி சென்று மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.

மாநில மற்றும் தேசிய அளவிலான காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளது.

பல சோதனைகள், சவால்கள், எதிர்ப்புகள் கடந்து மாணவர்கள் தேசிய அளவிலான காற்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிய பயிற்சிகளும் மகத்தான வெற்றிக்கு ஒன்றாகும்.

வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் பள்ளியின் இணைப்பாட பிரிவு துணைத்தலைமையாசிரியர் சுரேஷ் இராமச்சந்திரனின் சீரிய திட்டமிடல், அயராத உழைப்பு, களம் இறங்கி பயிற்றுவித்த விதம் இவ்வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்