Jun 30, 2026
Thisaigal NewsYouTube
40 லட்சம் ரிங்கிட் போலி ஆவண மோசடி: கணக்காளர் கைது
தற்போதைய செய்திகள்

40 லட்சம் ரிங்கிட் போலி ஆவண மோசடி: கணக்காளர் கைது

Share:

நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றிய 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், சுமார் 40 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

கடந்த 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்து கட்டணங்கள், டீசல் கொள்முதல், நிலப் பணிகள் மற்றும் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் போலி ஆவணங்கள் மூலம் இவர் மோசடி செய்ததாகத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு விசாரணைக்காக புத்ராஜெயாவிற்கு அழைக்கப்பட்டபோது அந்நபர் கைது செய்யப்பட்டார். அவரை வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related News