Jul 2, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் வழக்குகளிலிருந்து சர்ச்சைக்குரிய ராப் பாடகர் நாம்வீ விடுதலை
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் வழக்குகளிலிருந்து சர்ச்சைக்குரிய ராப் பாடகர் நாம்வீ விடுதலை

Share:

வீ மெங் சீ என்ற இயற்பெயரைக் கொண்ட சர்ச்சைக்குரிய ராப் பாடகர் நேமிவீ மீது தொடரப்பட்டிருந்த இரண்டு போதைப்பொருள் வழக்குகளில் இருந்து கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்தது.

அவரது மீது சுமத்தப்பட்டிருந்த அக்குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி, கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் மனுவை, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் நிராகரித்தது.

இந்த வழக்குகள் 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டப் பிரிவு 9(1) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டப் பிரிவு 39A(1) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேமிவீ தாக்கல் செய்த இரண்டாவது மனுவை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி இன்று அவரை அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி, ஜாலான் கான்லே பகுதியில் உள்ள தங்கும்விடுதியின் அறையில், 1.57 கிராம் methamphetamine வைத்திருந்ததாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு