Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தொடக்க விழாவில் நான்கு முக்கிய குறுநில பாரம்பரியத் தலைவர்களான ‘உண்டாங் உண்டாங் ’ பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில அரச தலைமைத்துவம் தொடர்பான சட்ட சிக்கல்கள் தீரும் வரை இவ்விழாவை ஒத்திவைக்குமாறு சுங்கை உஜோங், ஜெலுபு, ஜோகூல் மற்றும் ரெம்பாவ் ஆகிய நான்கு மாவட்ட பாரமப்ரியத் தலைவர்களும் விடுத்த கோரிக்கை விடுத்திருந்த நிலையில் , சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் இன்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தங்களை பதவியிலிருந்து நீக்க முயற்சி நடப்பதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாநில அரச நிர்வாகத்தில் மாற்றமில்லை என அரசு அறிவித்துள்ளது. இந்த மோதலால் நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தினரிடையே தற்போது கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Related News