Dec 26, 2025
Thisaigal NewsYouTube
இரட்டைக் கொலை: நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரட்டைக் கொலை: நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

பட்டர்வொர்த், டிசம்பர்.26-

தனது சொந்த தாயாரையும், வளர்ப்பு தங்கையையும் கொலை செய்ததாக நில அளவையாளர் ஒருவர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

23 வயது Daniel Qayyum Kamarolzlan என்ற அந்த நில அளவையாளர் மாஜிஸ்திரேட் Balqis Roslin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி காலை 9.45 மணியளவில் பட்டர்வொர்த், தாமான் ஆயர் தாவார், லோரோங் நக்கோடாவில் உள்ள ஒரு வீட்டில் தாயையும் வளர்ப்பு சகோதரியையும் கொலை செய்ததாக அந்த நில அளவையாளர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News