குவாந்தான், ஆகஸ்ட்.17-
குவாந்தான், சுங்கை லெம்பிங் வட்டாரத்தில் உள்ள சுங்கை பாயாஸ் தொழிலாளர் குடியிருப்பில், குடிபோதையில் மற்றவர்களைத் தொந்தரவு செய்த மியான்மார் நாட்டவரை, அவரது அறைத் தோழர் கத்தியால் குத்திக் கொன்றார். குடிபோதையில் இருந்த அந்த 42 வயது மியான்மார் ஆடவர், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது இறந்து விட்டதாக குவாந்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், 38 முதல் 64 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டக் கத்தியைக் காவல் துறையினர் கண்டுபிடித்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








