பகாங் சுகாதாரத் துறை இன்று தங்கள் முகநூல் பக்கம் வாயிலாக அரசியல் தொடர்பான செய்தி பதிவிடப்பட்டு அது வைரலானதைத் தொடர்ந்து விரிவான விசாரணையை நடத்தப்பட்டு வருகிறது
அரசாங்கத்தின் கொள்கைகளை தமது தரப்பு முழுமையாக ஆதரிக்கிறது என்று பகாங் மாநில சுகாதார இலாகாவின் இயக்குநர் டாக்டர் நோர் அசிமி யுனுஸ் வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் குறித்து அவர் இன்று குவாந்தனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகயில், தமது இலாகாவின் அதிகாரி இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இலாகா தயங்காது என்றார்.
இஸ்லாமிய சமயம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்தலந்தப் பதிவு இருந்ததாக நம்பப்படுகிறது








