Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கடமையைச் செய்ய விடாமல் காவல் துறையினருக்கு இடையூறாக இருந்த ஆடவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடமையைச் செய்ய விடாமல் காவல் துறையினருக்கு இடையூறாக இருந்த ஆடவர் கைது

பட்டர்வொர்த், ஜூன்.21-

கடந்த வியாழக்கிழமை, பினாங்கு, ஜாலான் பாகான் டாலாமில் காவல்துறை அதிகாரியின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த ஆடவர் ஓட்டி வந்த காரைக் காவல்துறையினரால் நிறுத்தப்படச் சொல்லப்பட்டபோது, ஒத்துழைக்க மறுத்து வேகமாகச் சென்றதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அந்தக் காரைத் துரத்திச் சென்ற பிறகு பிளட் அம்பாங் ஜஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரது வாகனத்தில் ஷாபு வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சந்தேக நபர் சிறுநீர் சோதனையில் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்ததாக அனுவார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →