Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஜூலை 1 ஆம் தேதி முதல் Touch ‘n Go இ-வால்லட் மூலம் My50 போக்குவரத்து பாஸைப் புதுப்பிக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜூலை 1 ஆம் தேதி முதல் Touch ‘n Go இ-வால்லட் மூலம் My50 போக்குவரத்து பாஸைப் புதுப்பிக்கலாம்

கோலாலம்பூர், ஜூன்.26-

வரும் ஜுலை 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Touch ‘n Go இ-வால்லட் வாயிலாக ம் My50 போக்குவரத்து pass-ஸை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பயனர்கள் e- know – your customer அல்லது EKYC முறையின் வாயிலாக மலேசிய குடியுரிமையைச் சரிபார்த்துக் கொள்ளவும் இது உதவும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தவிர செயலி வாயிலாக NFC செயல்படுத்தப்பட்ட TnG அட்டையைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் My50 போக்குவரத்து பாஸைப் புதுப்பிக்கலாம் என்று அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.

தற்போது, My50 போக்குவரத்து பாஸ்களை ரெபிட் KL முகப்பிடங்களில் மட்டுமே புதுப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. இதனைப் புதுப்பிக்க ஒருவருக்கு சராசரி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஆகின்றன என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் 15 வாடிக்கையாளர்கள் இருந்தால், காத்திருக்கும் நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம். இதனைச் சற்று கற்பனை செய்து பாருங்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் அத்தகைய முகப்பிடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறித்து தமக்கு அதிகமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

My50 போக்குவரத்து பாஸ், டிஜிட்டல் மயமாக்கல் முறையின் மூலம் ரேபிட் KL முகப்பிடங்களில் நீண்ட வரிசைகளைக் குறைக்க முடியும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →