வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதைத் தொடர்ந்து சீனா, தாய்லாந்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான முன்னெடுப்பில் விவசாயம், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சு இறங்கியுள்ளது.
உலகில் வெங்காய ஏற்றுமதிக்கு முதன்மை நாடான இந்தியா தனது உற்பத்தியில் 36 விழுக்காட்டை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. எனினும் அந்த நாடு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் நாட்டில் வெங்காய விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனை சமாளிக்கவே சீனா, தாய்லாந்திலிருந்து வெங்காயம் இறக்குமதியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மலேசியா மேற்கொள்ளும் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.








