கோலாலம்பூர், அக்டோபர்.24-
பினாங்கு, பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை சனிக்கிழமை வரை அடைமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா, சரவாக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானில் ஜெலெபு, சிரம்பான், போர்ட்டிக்சன் பகாங்கில் கேமரன் ஹைலண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், தெமர்லோ, ஜெராண்டூட் , திரெங்கானுவில் பெசுட், கோல நெருஸ், உலு திரங்கானு முதலிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சற்று கடுமையாக இருக்கும் என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








