Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சையிட் சாடிக்கின் கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சையிட் சாடிக்கின் கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு

புத்ராஜெயா, நவ.12-


குற்றவியல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மானின் கடப்பிதழை தற்காலிகமாக திரும்ப ஒப்படைப்பதற்கு புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக, நீதிமன்றத்தின் பிடித்தத்தில் உள்ள தமது அனைத்துலக கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி சே ருஸிமா கஸாலி அனுமதித்தார்.

சையிட் சாடிக்கின் விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாளை நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரையில் ஜாகர்த்தாாவில் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கில் சையிட் சாடிக் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →