பணியிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இரட்டை உடன் பிறப்புகள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று காலை 11.50 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், ஜாலான் ரிசாப் டெராமான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
ஜெராம், ஜாலான் புக்கிட் குச்சிங்கை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும், பன்டார் புன்சாக் அலாம்மிற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது. அவர்கள் பயணித்த Yamaha Y 16 ரக மோட்டார் சைக்கிளை நிஸ்ஸான் ரக வேன் ஒன்று மோதியதில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவர்கள், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முஹமாட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.








