எதிர்வருகின்ற ஏப்ரல் 20 ஆம் நாள் அன்று பிறை பார்க்கப்பட்டு ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கான 1 ஷவால் நாளை மலேசிய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் என்பதால் அதுவரை மலேசிய இஸ்லாமியர்கள் பொறுமை காக்குமாறு தொலைதொடர்பு மற்றும் இலகியவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸீல் தெரிவித்தார்.
அரச முத்திரை வைத்திருப்பவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாம் காத்திருப்பதாகவும் அவர்கள் அறிவிப்பு செய்தபின் ஊடகங்களில் ஹரி ராய பெருநாள் கொண்டாடுவதற்கான நாள் ஏப்ரல் 20ஆம் நாள் இரவு 8.00 மணிக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.








