Jul 31, 2026
Thisaigal NewsYouTube
130,000 லிட்டருக்கும் மேற்பட்ட டீசலை போலீசார் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

130,000 லிட்டருக்கும் மேற்பட்ட டீசலை போலீசார் பறிமுதல்

Share:

போர்ட் கிள்ளான் - கில் கடத்தல் கும்பலை முறியடிக்கும் போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனையில் 130,000 லிட்டருக்கும் மேல் மதிப்பிலான டீசல் பறிமுதல் செய்யப்பட்டன.

டிசம்பர் 6 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் வெளிநாட்டை சேர்ந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் தலைவர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட டீசல் மற்றும் கப்பலின் விலை மதிப்பு ஏறத்தாழ 14,300,000 வெள்ளி என டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை டீசல் உள்ளிட்ட மானிய விலையில் பொருட்களை கடத்தும் குழுக்கள் மீது 66 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகும் இதில் 240 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News